சிவகாசி: தனியார் லாட்ஜில் பள்ளி ஆசிரியர் மர்ம சாவு....

53பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி தனியார் லாட்ஜில்
பள்ளி ஆசிரியர் மர்ம சாவு. போலீஸார் விசாரணை.
திண்டுக்கல் ஓய். எம். ஆர் பட்டியை சேர்ந்தவர் அந்தோணி ஜோசப் மில்டன் ( 59). இவரது மனைவி சிசிலி ( 53 ) திண்டுக்கல் உள்ள ஒரு பெண்கள் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அந்தோணி ஜோசப் மில்டன் சிவகாசியில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மருந்துவம் சாப்பிட்டு வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து நெஞ்சு வலிப்பதாக
குடும்பத்தினரிடம் தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்தோணி ஜோசப் மில்டன் சம்பவத்தன்று லாட்ஜில் மர்மமான முறையில் இறந்து கிடந்து உள்ளார். இது குறித்து லாட்ஜ் நிர்வாகி சிவகாசி கிழக்கு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி