சிவகாசியில் முன்னாள் அமைச்சர் கே.டி. இராஜேந்திரபாலாஜி தலைமையில் சாலை மறியல் போராட்டம். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், முதல்வர் பதவி விலக கோரி, விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி. இராஜேந்திரபாலாஜி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் போது போலீசாருக்கும், கட்சியினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும் தடுக்க முயன்றபோது அதிமுக கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு. சாலை மறியல் போராட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா மற்றும் அதிமுக கட்சியின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.