சிவகாசி: குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

56பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட எம். புதுப்பட்டியில் பழைய போலீஸ் நிலையம் அருகே குப்பைகள் மலை போல் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பைகளை பொதுமக்கள் கொண்டு வரும் போது பஞ்சாயத்து நிர்வாகம் எந்த தடுப்பு நடவடிக்கையும் இல்லை. 

இதனால் ஒரே வாரத்தில் அந்த பகுதியில் குப்பைகள் அதிக அளவில் சேர்ந்து விடுவதால், குப்பைகளை ஒருசிலர் தீ வைத்து எரித்து விடுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. அந்த பகுதியை கடந்து செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதனை தடுக்க அந்த பகுதியில் குப்பை தொட்டி வைத்து அதில் சேரும் குப்பைகளை அகற்ற பஞ்சாயத்து நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பல இடங்களில் குப்பைகளை கொட்ட இடம் இல்லாத நிலையில் பொதுமக்கள் முக்கிய சாலைகளில் கொட்டி வருகிறார்கள். 

இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயநிலை நிலவுகிறது. அதேபோல் வாரத்திற்கு ஒருமுறை அந்த குப்பைகளை தீ வைத்து எரித்து வருகிறார்கள். இதனால் சுற்றுச்சூழலும் பாதிக்கிறது. எனவே இதுபோன்ற செயல்களை தவிர்க்க யூனியன் நிர்வாக அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகங்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி