சிவகாசி அருகே திருத்தங்கல் மாநகராட்சி மண்டலத்தில் வெறி நாய் தடுப்பூசி முகாம் மேயர் பங்கேற்பு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் வெறி நாய் தடுப்பூசி முகாமை மேயர் சங்கீதாஇன்பம் தொடங்கி வைத்தார். சிவகாசி மாநகராட்சி, கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து ரேபிஸ் வெறிநாய் தடுப்பூசி முகாம் மாநகராட்சி திருத்தங்கல் மண்டல அலுவலத்தில் நடைபெற்றது. இம்முகாமினை மேயர் சங்கீதா தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
மேலும் முகாமில் அரசு கால்நடை மருத்துவர்கள் டாக்டர் பழனிச்சாமி, மலர், துரைமாஸ்கோ தலைமையிலான மருத்துவ குழுவினர்கள் பொதுமக்கள் கொண்டு வந்த நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினார். முகாமிற்கான ஏற்பாடுகளை மாநகர் நல அலுவலர் சரோஜா தலைமையில் சுகாதார அலுவலர்கள் சுரேஸ், சத்தியராஜ், திருப்பதி சுகாதார ஆய்வாளர்கள் முத்துப்பாண்டி , சித்திக் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஆசிர்வாதம், செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டலத் தலைவர் குருசாமி மற்றும் மாமன்ற உறுப்பனர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.