சிவகாசி: குண்டர்சட்டத்தில் கைது செய்ய பொதுமக்கள் கோரிக்கை

75பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சிவகாமிபுரம் காலனியை சேர்ந்த பட்டாசு ஆலை தொழிலாளி கருப்பசாமியை கடந்த 9-ம் தேதி மாரிமுத்து, அவரது சகோதரர் குமார், கணேசன், அவரிடம் பணி புரியும் பட்டாசு தொழிலாளி ஜோசப் ஆகிய நால்வரும் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். 

இக்கொலை சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை குற்றவாளிகள் நால்வரையும் கைது செய்தனர். இந்நிலையில் சிவகாமிபுரம் காலனியில் வசிக்கும் கிராம மக்கள் சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பட்டாசு தொழிற்சாலை நடத்தி வரும் முருகன் காலனி கணேசன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையிலுள்ள நிலையில், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். 

அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் சப்-கலெக்டர் பிரியா ரவிசந்திரனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். சிவகாமிபுரம் காலனி கருப்பசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள பட்டாசு தொழிலதிபர் கணேசன் மீது கடந்த 2012-ம் ஆண்டு முதல் தற்போது வரை சிவகாசி, வெம்பகோட்டை, திருவேங்கடம், சாத்தூர் காவல் நிலையங்களில் 10 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி