சிவகாசி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் மண்டலத்தில் கே. கே. நகர் முனீஸ்வரன் காலனி உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அப்பகுதி பெண்கள் திடீரென கே. கே. நகரில் சாலை அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் போலீசார், மாநகராட்சி அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டன.