சிவகாசி: திமுக ஆட்சியில் அனைத்து பொருட்களும் விலை உயர்வு -KTR

74பார்த்தது
திமுக ஆட்சிக்கு வந்தாலே துன்பமும் துயரமும் சேர்ந்தே வந்துவிடுமென சிவகாசியில் நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்
கே. டி. ராஜேந்திரபாலாஜி பேச்சு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட 15 வாக்குச்சாவடி மையங்களில் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த ஆலோசனை கூட்டம் ஏ. லட்சுமிபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே. டி. ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு
பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றன. பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி,
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் புரட்சித் தமிழர் எடப்பாடியாரை முதலமைச்சர் ஆக்க அனைவரும் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும், ஓட்டு போட்ட மக்களை துன்புறுத்தும் விதமாக திமுக ஆட்சியில் அனைத்து பொருட்களின் விலை உயர்வு, திமுக ஆட்சிக்கு வந்தாலே துன்பமும் துயரமும் சேர்ந்தே வந்துவிடும் எனவும்,
அதிமுக ஆட்சி அமைந்த உடன் வேலைக்காக காத்திருப்பவர்களுக்காக வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார்.
போதை கலாச்சாரம் இல்லாத தமிழ்நாடு ஆக மாற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி