சிவகாசி: ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம்...

57பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஒன்றியம் நாரணாபுரம் ஊராட்சியில் இன்று காலை ஊராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் ஜெகதீஸ்வரி வரவேற்புரை இட்டார். கூட்டத்தில் ஊராட்சியில் செய்ய வேண்டிய வளர்ச்சிப் பணிகளுக்கு வார்டு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. கூட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஊராட்சியில் பேரளவு வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ்க்கு வார்டு உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர். 

கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பேசும்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் நாரணாபுரம் ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள பெரும் உதவியாக இருந்த தமிழக முதல்வருக்கும் விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கும், சிவகாசி சட்டமன்ற உறுப்பினருக்கும், விருதுநகர் எம்.பி.க்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார். ஊராட்சியில் 90 சதவீதப் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளேன், இன்னும் 10 சதவீதப் பணிகளை முடித்துத் தர வேண்டும் என்று அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார் என்றார்.

தொடர்புடைய செய்தி