சிவகாசி: தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் ஓவிய போட்டி..

67பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி எஸ்.ஹெச்.என்.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தைத் திங்கள் தமிழர் பண்பாட்டு மாதத்தை ஒட்டி தமிழரின் பெருமைகளை புறைசாற்றும் வகையில் தமிழ், தமிழர், தமிழ்நாடு - பண்பாடும் பெருமிதங்களும் என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்குபெறும் வகையில் தனித்தனியே 3 பிரிவுகளில் ஓவிய போட்டிகள் நடைபெற்றது. 

இந்த போட்டியில் 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, தமிழ் தமிழர் பண்பாடுகளின் வழிபாட்டு முறை, வீரவிளையாட்டுகள், பண்டிகை தினங்கள் மற்றும் வாழ்வியல் முறைகளை வண்ணங்கள், தூரிகையால் ஓவியம், பென்சிலிலான ஓவியம், ஆயில் பெயிண்ட் போன்றவற்றால் தங்களின் ஓவியத் திறமையை அருகருகே அமர்ந்து ஆர்வமுடன் வெளிக்காட்டினர். மாணவ, மாணவிகள் ஓவியக்கலை மீது வைத்திருக்கும் ஆர்வத்தை நடுவர்கள் கண்டு ரசித்தனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி