சிவகாசி: ஸ்ரீநின்றநாராயண பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு

76பார்த்தது
சிவகாசி அருகே திருத்தங்கல், ஸ்ரீநின்றநாராயண பெருமாள் சொர்க்க வாசல் திறப்பு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அடுத்து திருத்தங்கலிலுள்ளபிரசித்தி பெற்ற ஸ்ரீநின்றநாராயண பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்று விளங்கும் திருத்தங்கல் ஸ்ரீநின்றநாராயண பெருமாள் கோவிலில் மார்கழி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏகாதசி நாளன்று ஸ்ரீநின்றநாராயண பெருமாள் சுவாமிக்கும், ஸ்ரீசெங்கமலத் தாயார் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஸ்ரீசெங்கமலத் தாயார், ஸ்ரீநின்றநாரயண பெருமாள் சுவாமிகள் மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர், ஸ்ரீநின்றநாராயண பெருமாள் சுவாமி சயன திருக்கோலத்தில், ஸ்ரீசெங்கமலத் தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். ஜன. 10 நள்ளிரவு, ஸ்ரீசெங்கமலத் தாயார் - ஸ்ரீநின்றநாராயண பெருமாள் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி, பரமபத வாசல் என்ற சொர்க்க வாசலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். நிகழ்ச்சியில் சிவகாசி, திருத்தங்கல் மற்றும் சுற்றுபகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி