திமுக ஆட்சியில் எந்த ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேல்மணி சிவகாசியில் குற்றசாட்டு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. டி. இராஜேந்திரபாலாஜி தலைமையில் நேற்று இரவு
டிச 26 நடைப்பெற்றன. மேலும் இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் S. P. வேல்மணி, R. B. உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி
வேலுமணி பேசிய போது: - எந்த திட்டமும் கொண்டு வராத ஆட்சி திமுக ஆட்சி தான் என்று குற்றம் சாட்டிய அவர், திமுக ஆட்சி போக வேண்டும், மீண்டும் எடபாடியார் ஆட்சி வரவேண்டுமென்று மக்கள் விரும்புகின்றனர், மேலும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெரும் என்றார், மேலும் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாநகர, ஒன்றிய நிர்வாகிகளும், அதிமுக சேர்ந்த பல்வேறு அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.