விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள ஆனைக்குட்டம் ஊராட்சியில் புதிய கலையரங்கத்தை ஏ. ஆர். ஆர். சீனிவாசன் எம்எல்ஏ இன்று (டிசம்பர் 25) திறந்து வைத்தார். சிவகாசி ஊராட்சி ஒன்றியம் ஆனைக்குட்டம் ஊராட்சியில் புதிய கலையரங்கம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டது.
இந்த கலையரங்கம் திறப்பு விழா டிச. 25 இன்று காலை நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் முத்துராஜ் தலைமை வகித்தார். விருதுநகர் எம்எல்ஏ ஏ. ஆர். ஆர். சீனிவாசன், சிவகாசி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவரும் திமுக ஒன்றிய செயலாளருமான விவேகன்ராஜ் கலந்து கொண்டு கலையரங்கத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, சிவகாசி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தங்கராசா, திமுக நிர்வாகி வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆனைக்குட்டம் ஊராட்சி செயலாளர் முனீஸ்வரன் செய்திருந்தார்.