விருதுநகர் மாவட்டம், மதுரை-கோவை இடையே இயக்கப்படும் தினசரி ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் அசோகன் எம்எல்ஏ வலியுறுத்தல்.
மதுரை-கோவை இடையே இயக்கப்படும் தினசரி ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என அசோகன் MடA தென்னக ரயில்வே மேலாளர் விவேக்ஷர்மாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில், கோவை- மதுரை - கோவை இடையே இயக்கப்படும் தினசரி ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும். பெங்களூருக்கு சிவகாசி வழியாக ரயில் இணைப்பு வேண்டும், சிலம்பு அதிவிரைவு வண்டியை தினசரி சேவையாக மாற்ற வேண்டும்,
மதுரையிலிருந்து (செங்கோட்டை, கொங்கன் வழியாக) மும்பை மற்றும், செங்கோட்டையிலிருந்து திருப்பதிக்கு ஆண்டாள் விரைவு வண்டி என புதிய சேவைகளை இயக்க வேண்டும், செகந்தராபாத்-கொல்லம் சிறப்பு ரயிலை வாராந்திர சேவையாக தொடர்ந்து இயக்க வேண்டும், பயணிகளுக்கு மேம்பட்ட வசதிகள் ஏற்படுத்தும் பொருட்டு, சிவகாசி ரயில் நிலையத்தை, இரண்டாம் கட்ட அம்ரித் பாரத் திட்டத்தில் சேர்க்க வேண்டும், செங்கோட்டையில் பிட்லைன் வசதி உருவாக்கி, பயன்பாட்டிற்கு கொண்டு வர செயல் வடிவம் தர வேண்டும், சிவகாசி ஒய்ஆர்டிவி பள்ளி அருகிலுள்ள லெவல் கிராசிங் எண் 426ஐ அகலப்படுத்த வேண்டும் இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.