சிவகாசியில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் மினி மாரத்தான் போட்டி.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் புகையில்லா போகிப்பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு மினிமாரத்தான் ஓட்டத்தில் 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு!!
சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடவும், நாளைய உடல் வலிமைக்கு இன்று ஓடுவோம் என்பதை வலியுறுத்தி, சிவகாசியில் கல்லூரி மாணவ மாணவியர் 4000 பேர் பங்கேற்ற விழிப்புணர்வு மினி மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. மாணவர்களுக்கு10-கிலோமீட்டர் தூரமும், மாணவியருக்கு
4-கிலோமீட்டர்தூரமும் நிர்ணயிக்கப்பட்டிருந்த மினி மாரத்தான் ஓட்டப்பந்தய போட்டியில், ஆர்வத்தோடு உற்சாகமாக பங்கேற்றவர்களை, ஊக்குவித்து பாராட்டும் விதமாக முதல்10 இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்க பணத்துடன், பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.