சிவகாசி மாநகராட்சியில் 2 தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மாமன்ற கூட்டத்தில் 2 மணி நேரம் நடைபெற்ற விவாதம்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டம் மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ் பிரியா தலைமையில் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் பங்கேற்க கூட்டம் இன்று கூட்டரங்கில் நடைபெற்றது. இரண்டே இரண்டு தீர்மானங்கள் மட்டுமே உள்ள கூட்டத்தில், ஒரு நிமிடத்தில் வாசித்து தீர்மானம் நிறைவேற்றம் செய்யபட்டாலும், மாமன்ற உறுப்பினர்களின் விவாதத்தால் கூட்டம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. தங்களின் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தங்களுக்குத் தெரியாமலேயே மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்துவதாக புகார் தெரிவித்த உறுப்பினர்கள், மேலும் வாக்களித்த மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என பெரும்பாலான மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் மீது குற்றம்சாட்டி பேசினர். அப்போது மாமன்ற உறுப்பினர்களின் புகார்களுக்கு ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அலுவலர்கள் பதில் கூற முடியாமல் திணறியதால், மேயர் சங்கீதா, ஆணையாளரை மாமன்ற கூட்ட மேடை அரங்கிலேயே கடித்து கொண்டார். தொடர்ந்து வார்டுகள் வரையறை செய்யப்பட்டதில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக பெண் மாமன்ற உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் சந்தை கடை போல காரசாரமாக விவாதித்துக் கொண்டதால் கூட்ட அரங்கில் திடீர் பரபரப்பு நிலவியது.