சிவகாசி: சட்டவிரோதமாக பட்டாசுகள் வைத்திருந்தவர் கைது

84பார்த்தது
சிவகாசி அருகே சட்ட விரோதமாக பட்டாசுகள் வைத்திருந்தவர் கைது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கே.கே. நகர் பகுதியில் கிழக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரபியம்மாள் தலைமையில் போலீசார் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த கணேசன் (38) என்பவர் தனது வீட்டின் அருகில் தகர செட் அமைத்து அதில் பேன்சி பட்டாசுகளை வைத்திருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அந்த பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி