சிவகாசியில் அருகே லோடுமேன் தற்கொலை. போலீஸார் விசாரணை.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே முனீஸ்வரன் காலனியை சேர்ந்தவர் ராமசாமி மகன் ஆறுமுகம் (24). லோடுமேன் வேலை செய்து வந்தார். மது அருந்தும் பழக்கம் இருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனை தந்தை ராமசாமி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வாலிபர் ஆறுமுகம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.