சிவகாசி: புதிய ரேஷன் கடை திறப்பு விழா

57பார்த்தது
சிவகாசி அருகே விஸ்வநத்தம் நடுவூர் பகுதியில் ரேஷன் கடை பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதியதாக கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து சிவகாசி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியில் ரூ. 13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டது.

இந்த புதிய ரேஷன் கடை திறப்பு விழா இன்று(செப்.29) நடைபெற்றது. சிவகாசி திமுக ஒன்றிய செயலாளரும் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவருமான விவேகன்ராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய ரேஷன் கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி