சிவகாசி அருகே தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்தவர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே உள்ள பாரைப்பட்டியில் பரமசிவம் என்பவருக்கு சொந்தமான காலி மனையில் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்து இருப்பு வைத்து இருப்பதாக சிவகாசி கிழக்கு காவல் நிலையத்துக்கு தகவல் வந்தன. மேற்படி தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் ஆனந்த குமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் இருப்பு இருந்ததை கைப்பற்றினர். மேலும் பரமசிவம் மீது சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.