சிவகாசியில் நடத்தையில் சந்தேகம், மனைவி கமுத்தை அறுத்து கொலை. கணவர் போலீசில் சரண்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கத்தியால் கழுத்தை கொலை செய்துவிட்டு, போலீஸ் ஸ்டேஷனில் கணவர் சரணடைந்தார். தேனி மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் பாலாஜி (39). இவருக்கும் சிவகாசி அருகே எம். புதுப்பட்டி போலீஸ் ஸ்டேசன் எல்லையில் உள்ள பிச்சுபட்டி காலனியை சேர்ந்த ராம்கலா (29) என்பவருக்கும் 12 வருடத்திற்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. இவர்களுக்கு 11 வயதில் கோகுல் என்ற மகனும், 5 வயதில் பவித்ரா என்ற பெண்ணும் உள்ளனர். பாலாஜி பிச்சுபட்டி காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த பாலாஜி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் மனைவியுடன் பாலாஜி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாலாஜி, மனைவி ராம்கலாவை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ராம்கலா ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்த பாலாஜி எம். புதுப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் எம். புதுப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து எம். புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.