சிவகாசி அருகே முன்விரோதம் காரணமாக வீட்டுக்கு தீ வைப்பு. போலீஸார் விசாரணை.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள எரிச்சநத்தம் பர்மா காலனியை சேர்ந்தவர் முனியாண்டி மனைவி புஷ்பா (68). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கியம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று இரவு மூதாட்டி புஷ்பா வீட்டில் படுத்து தூங்கிகொண்டிருந்த போது வீட்டுக்கு யாரோ மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதில் வீடு எரிந்து நாசமானது. இது குறித்து புஷ்பா எம். புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ஆரோக்கியம் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.