சிவகாசி: புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா.. அமைச்சர் பங்கேற்பு

68பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு கல்லூரியில் ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக பார்வையாளர்கள் அமர்வு கூடம் கட்டுமான பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று டிச. 25 அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். சிவகாசி அரசு கல்லூரியில் ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் பார்வையாளர்கள் அமர்வு கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அரசு கல்லூரியில் பார்வையாளர்கள் அமர்வு கூடம் அமைக்க பூமிபூஜை இன்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு புதிய கட்டிடப் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிவகாசி எம்எல்ஏ அசோகன், சிவகாசி யூனியன் தலைவர் முத்துலட்சுமி, மேயர் சங்கீதா, தொழிலதிபர் காளீஸ்வரி ஏ. பி. செல்வராஜன், உப்பட பலரும் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி