சிவகாசியில் வாண வேடிக்கையுடன் தொடங்கிய உணவு திருவிழா. ஏராளமானோர் பங்கேற்பு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசியில் மாவட்ட நிர்வாகம் சார்பாக SHNV பள்ளி மைதானத்தில் சுவையுடன் சிவகாசி-2024' என்ற தலைப்பில் இரண்டு நாள் டிச. 28, 29 உணவு திருவிழா தொடங்கியது. இந்த உணவு திருவிழாவில் உலக அளவில் முக்கிய அசைவ உணவுகள், இந்தியாவின் பாரம்பரிய உணவு வகைகள், தமிழகத்திலுள்ள முக்கிய உணவுகள் குறிப்பாக கொங்கு மண்டலங்களில் பிரபலமாக உள்ள உணவுகள் தயார் செய்து விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதனை பொதுமக்கள் மிகவும் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர் இந்த உணவு
திருவிழாவில் பொது மக்களை உற்சாகப்படுத்தும் வகையில் நகைச்சுவை, இசை, ஆடல், பாடல் நிகழ்கழ்ச்சிகள் நடைபெற்றது. உணவு திருவிழாவில் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் உற்பத்திகளை பொதுமக்கள் பார்வைக்கு கண்காட்சிபடுத்தி இருந்தன. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறையாக இருப்பதால் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியை சேர்ந்த சுமார் 12 ஆயிரம் பேர் குடும்பத்துடன் கலந்து கொண்டு பல்வேறு வகையான உணவுகளை உண்டு மகிழ்ந்தனர். இந்த உணவு திருவிழா இன்று கடை நாளான உணவு திருவிழாவில் சுமார் 15 நிமிடம் வாணவேடிக்கைகள் வெடிக்கப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். ஏற்பாடுகளை செய்தனர். உணவு திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சிவகாசி சப்- கலெக்டர் ப்ரியாரவிச்சந்திரன் செய்திருந்தார்.