விருதுநகர் மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் கடந்த ஆகஸ்டு 5ம் தேதி கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களை இலங்கைச் சிறையில் அடைத்தனர். இதனைக் கேள்விப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கவிஞர் திலகமாமா தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்திற்குச் சென்று அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்பு மீனவர்களை விடுவிக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கவிஞர் திலகமாமா கடந்த ஆகஸ்டு 12ஆம் தேதி சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து ஆகஸ்டு 12ஆம் தேதி இலங்கைக்குச் சென்று அங்கு மூன்று நாள் தங்கி மீனவர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து அவர்களை விரைவாக விடுவிக்க கோரிக்கை வைத்தார். இவரது முயற்சியினால் கடந்த நவம்பர் 30ஆம் தேதி 12 மீனவர்களும், டிசம்பர் 31ஆம் தேதி 10 மீனவர்களையும் இலங்கை அரசு விடுவித்து தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்திற்கு வந்தடைந்தனர். விடுதலை அடைவதற்கு உறுதுணையாக இருந்து நடவடிக்கை எடுத்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கவிஞர் திலகமாமாவை இன்று சிவகாசியில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்து விடுவிக்கப்பட்ட 22 மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து அவரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்