சிவகாசி அருகே கொடூரம், கள்ள காதலி ஸ்கெட்ச், கள்ள காதலன் வெட்டிக் கொலை.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே ஆலாவூரணியைச் சேர்ந்த பெருமாள் மகன் சுரேஷ் 27. கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வந்த சுரேஷ், ஏற்கனவே திருமணமான சுந்தரி என்ற பெண்ணுடன் சிவகாசி முனீஸ் நகரில் வீடு எடுத்து வசித்து வந்தார். மார்ச் 16 இரவு வீட்டில் இருந்த சுரேஷ் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக் கில் திருத்தங்கல் சரஸ்வதி நகரை சேர்ந்த மதனகோபால் 23, தனசேகரன் 23, சூர்யபிரகாஷ் 19, தருண்குமார்23, முத்துப்பாண்டி 23, ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று மார்ச். 21 கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கள்ள காதலிசுந்தரி, வேலுச்சாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், சுரேஷ் உடன் வசித்து வந்த கள்ளக்காதலி சுந்தரிக்கு, வேலுச்சாமி, தருண் உடன் கள்ள தொடர்பு இருந்துள்ளது. மார்ச். 16 ஞாயிறு இரவு வேலுச்சாமி சுரேஷிற்கு மது வாங்கி கொடுத்து வீட்டில் படுக்க வைத்தார். சுந்தரி தருணுக்கு தகவல் அளித்தார். அதன்பின் மதனகோபால், தருண், மருதுபாண்டி, வேலுச்சாமி உள்ளிட்டோர் வந்து சுரேஷை வெட் டிக் கொலை செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்ததாக சுந்தரி, வேலுச்சாமியை கைது செய்துள்ளோம், என்றனர்