திமுக ஆட்சியின் திறமையற்ற நிர்வாகத்திறன் காரணமாக தொடர் குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருவதாக முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு. அரசிற்கு அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை எனவும் சிவகாசியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேச்சு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கே. டி. ராஜேந்திரபாலாஜி, பங்கேற்றனர். அப்போது பேசிய ராஜேந்திரபாலாஜி, தொடர் குற்றச்சம்பவங்களால் திமுக அரசு தற்போது அச்சத்தில் உள்ளது, திமுக அரசிற்கு அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை, அரசை எப்படி இயக்க வேண்டும், காவல்துறையை எப்படி முடுக்கி விட வேண்டும் என்ற விவரம் புரியாமல் ஆட்சி நடத்துவதால்குற்றவாளிகளுக்கு தைரியம் வந்துவிட்டது. திமுக ஆட்சியில் குற்றவாளிகள் உலவுகிறார்கள், நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள், சட்டம் ஒழுங்கை சரி செய்ய முடியாத சந்தி சிரிக்கும் ஆட்சியாக திமுக ஆட்சி விளங்கி வருகிறது
பெண்களைக் குறி வைத்து குற்ற சம்பவங்களில் ஈடுபடும் சைபர் கிரைம் குற்றவாளிகள் தமிழகத்தில் பெருகிவிட்டார்கள்
குற்றச்சம்பவங்களை தடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள முதல்வர் கண்டும் காணாமல் இருக்கிறார், திமுக ஆட்சியின் திறமையற்ற நிர்வாகத்திறன் காரணமாக தொடர் குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டினார். ஆலோசனை கூட்டத்தில் மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.