சிவகாசி அருகே ஒன்றிய அரசை கண்டித்து திமுக இளைஞரணி சார்பாக பொதுக் கூட்டம்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல்லில் மாநகர திமுக இளைஞரணி சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமையில் நடைபெற்றது. இந்தி தினத்திற்கு எதிராகவும் நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டுவது, தொகுதி மறுசீராய்வில் அநீதி இழைப்பது என மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் கம்பம் செல்வேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். மேலும் திமுகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினரும், பகுதி கழக செயலாளருமான அ. செல்வம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், திமுகவை சேர்ந்த பல்வேறு அணி நிர்வாகிகள், ஆண், பெண் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.