சிவகாசியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி. திரளான வீரர்கள் பங்கேற்பு.
விருதுநகர் மாவட்டம், ,
சிவகாசியில், வினோத்குமார் மெமோரியல் ஏ கே ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியானது இரண்டு தினங்களாக பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. இந்த போட்டியில் கோவை, தென்காசி, தூத்துக்குடி விருதுநகர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 22 கால்பந்தாட்ட குழு வீரர்கள் பங்கேற்றனர். மே. 31 நேற்று நடைப்பெற்ற போட்டிகள் அனைத்தும் லீக் முறையில் நடைபெற்றன. இந்த போட்டியில் நேற்று இரவு நடைபெற்ற இறுதி சுற்று போட்டியில் மதுரை புட்பால் கிளப் அணியினர் வென்று பரிசுக்கோப்பை மற்றும் ரொக்கத்தொகையை தட்டிச் சென்றனர்.