பட்டாசு ஆலை வெடி விபத்து...சிவகாசியை சேர்ந்தவர்..!

11927பார்த்தது
சிவகாசி பகுதியை சேர்ந்த நபர் பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் ஒருவர் பலி.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் முருகன் காலனி பகுதியை சேர்ந்த பீர்முகமது என்பவரின் மகன் சீனு. மேலும் இவருக்கு திருமணம் ஆகி 9 மாத பெண் குழந்தை உள்ளது. சீனு சக நண்பர்களுடன் அரியலூர் மாவட்டம், வெற்றியூர் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலைக்கு தீபாவளி சீசனுக்கு நாட்டு வெடி பட்டாசுகள் தயார் செய்வதற்காக சிவகாசியில் இருந்து சென்றவர்.

மேலும் நேற்று காலை வெற்றியூர் பகுதி பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிவகாசி தாலுகா திருத்தங்கல் பகுதி முருகன் காலனியை சீனு (23) என்பவர் உடல் கருகி சம்பவ இடத்தில் பலியானார். மேலும் இது குறித்து வருவாய் துறையினர் இறந்தவரின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. மேலும் இறந்தவரின் உடலை பெறுவதற்காக அவரது குடும்பத்தினர் அரியலூர் விரைந்துள்ளனர். சீனு என்பவர் உயிர் இழந்த சம்பவம் திருத்தங்கல் முருகன் காலனி பகுதி மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி