விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள சிவன் ஆலயங்களில் சனிப் பிரதோஷ விழா நேற்று (டிச.28) அதிவிமர்சையாக நடைபெற்றன. பக்தர்கள் கொண்டுவந்த காணிக்கைப் பொருளான இளநீர், பால், தயிர், மஞ்சள், விபூதி மற்றும் வாசனைத் திரவியங்களைக் கொண்டு நந்தி பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டன.
பின்னர் வண்ண வண்ண மலர்களால் நந்தி பகவானை அலங்கரித்து, சந்தனக் காப்பு வைத்து, வெள்ளிக் கவசம் அணிவித்து பூஜைகள் நடைபெற்றன. சிவகாசி மற்றும் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான சிவன் பக்தர்கள் கலந்துகொண்டு நந்தி பகவானை வணங்கிச் சென்றனர். பின்னர் பிரதோஷ விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டன.