சிவகாசி: பார் ஊழியருக்கு கொலை மிரட்டல். 2 பேர் கைது...

63பார்த்தது
சிவகாசி அருகே பார் ஊழியருக்கு கொலை மிரட்டல்
2பேர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லை சேர்ந்தவர் கருப்பசாமி(39) இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பாரில் வேலை செய்து வருகின்றார். சம்பவத்தன்று சுக்குரவார்பட்டி ரோடு மேல்நிலை குடிநீர் தொட்டி அருகே கருப்பசாமி நின்று கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (23) செல்வகுமார் (24) ஆகிய 2பேரும் கருப்பசாமியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயற்சி செய்துள்ளனர். இது குறித்து புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐயப்பன், செல்வகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி