சிவகாசி இறுதி கட்டத்தில் காலண்டர்கள் அனுப்பு பணி விருவிருப்பு.
விருதுநகர் மாவட்டம்,
நாளை புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஒவ்வொறு இல்லங்களிலும் அலுவலகங்களிலும் ஜனவரி 1ஆம் தேதி புதிய காலண்டர் தொங்கவிடுவது வழக்கம். அதன்படி 2025 புத்தாண்டை வரவேற்கும் வகையில் தமிழகம் முழுவதிலும் காலண்டரை அனுப்பு பணிகள் சிவகாசியில் விருப்படைந்து உள்ளது. பல்வேறு வகையான தினசரி காலண்டர்களில், டேபிள், பிவிசி, ஆர்ட் பேப்பர் டெய்லி, ஃபேன்ஸி டை கட்டிங் காலண்டர்கள் என பல்வேறு வகையான காலண்டர்கள் உற்பத்தி செய்து அனுப்பு பணியில் ஊழியர்கள் உள்ளன. தற்போது இந்த ஆண்டு காலண்டர் விற்பனையில் 5டி எபெக்ட் காலண்டர்கள் விற்பனையில் முக்கிய அங்கம் வகித்துள்ளன. விஐபி காலண்டர் என்று இந்த காலண்டர்களை அழைப்பதும் வழக்கம். 12க்கு 24 சைஸ்சில் உருவாகியுள்ள இந்தக் காலண்டரில் திருப்பதி, விநாயகர், லட்சுமி, பழனி முருகன், அறுபடை முருகன் உட்பட சாமி படங்கள் மற்றும் கிருஸ்தவ, இஸ்லாமிய காலண்டா்கள் விற்பனையில் உள்ளன. மேலும் தமிழகம் மட்டும் இல்லாமல் வெளி மாநிலங்களுக்கு அனுப்பும் பணிகள் முடிவடைந்த நிலையில் தை திருநாளுக்கு அரசில் கட்சியினருக்கு வழங்குவதற்காக தற்போது அரசியல் கட்சியின் காலண்டர் ஆர்டர் வர தொடங்கி உள்ளன. இந்த வரும் 2025 தைப்பொங்கல் இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.