சிவகாசி: சிசிடிவி மூலம் குற்ற சம்பவங்கள் கண்காணிக்கப்படும்

72பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி- முதலிபட்டி சாலையில் நாரணபுரம் புதூரில் கண்காணிப்பு கேமரா வசதியுடன் கூடிய புறக்காவல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட எஸ்பி கண்ணன் கலந்து கொண்டு புதிய புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார். 

நிகழ்ச்சியில் டிஎஸ்பி பாஸ்கர், தொழிலதிபர் லெனின் கிருஷ்ணமூர்த்தி, நாரணாபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ், இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். தொடர்ந்து எஸ்பி கண்ணன் கூறும்போது, விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் வைக்க பழைய ரவுடிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர். 

இதில் 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று பல்வேறு குற்ற வழக்குகள் துப்பு துலங்க கண்காணிப்பு கேமராக்கள் பெரும் உதவியாக இருந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் 8 ஆயிரத்து 135 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. 

தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரியப்படுத்த வேண்டும். புகார்கள் தெரிவிக்க பொதுமக்கள் என்னுடைய செல்போன் 9940277199 இந்த நம்பரில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி