சிவகாசி கடை உரிமையாளரை சால்வை அணிவித்து பாராட்டிய மாநகராட்சி அதிகாரிகள்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா ஆலோசனையில், மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவில் மாநகர் நல அலுவலர் சரோஜா தலைமையில் மாநகர சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் சிவகாசி மாநகராட்சி உட்பட்ட கீழ ரதவீதி, ஜவுளிகடை வீதி, தெற்கு ரத வீதி, ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப்பைகள் இருக்கிறதா என்று திடீர் ஆய்வு செய்த போது 2 வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் வைத்திருந்தது கண்டறியப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ. 5ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடைகளிலிருந்து ரூ20ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் தெற்கு ரத வீதியில் அதிகாரிகள் ஆய்வின்போது அந்த பகுதியில் இருந்த ஒரு மிட்டாய் கடையில் பிளாஸ்டிக் மாற்றுப்பொருளாக பனை ஓலைப்பெட்டியில் இனிப்பு பலகாரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதை கண்ட மாநகர் நல அலுவலர் சரோஜா, மிட்டாய் கடை உரிமையாளரை பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள். மேலும் அந்த கடை உரிமையாளருக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தார்.