சிவகாசி: பராக மாறிவரும் மாநகராட்சி வணிக வளாகம்....

67பார்த்தது
சிவகாசியில் மது பாராக மாறிய மாநகராட்சிவணிக வளாகம். சிவன் கோயில் பக்தர்கள் அச்சம்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி சிவன் கோயில் அருகே உள்ள மாநகராட்சி வணிக வளாகம் மது பிரியர்களின் பிடியில் உள்ளதால் வணிக வளாகத்தை மீட்க அதிகாரிகள் நடவடிகை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். சிவகாசி சிவன் கோயில் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இங்கு ஏராளமான வர்த்தக கடைகள் உள்ளன. இங்கு இயங்கிய டாஸ்மாக் கடை கடந்த சில மாதங்களுக்கு மூடப்பட்டது. இதனால் சிவன் கோயில் பக்தர்கள், கடை வியாபாரிகள் நிம்மதி அடைந்தனர். தற்போது டாஸ்மாக் கடை இல்லாத போதிலும் தினமும் இரவு ஏராளமான மது பிரியர்கள் இங்கு அமர்ந்து மது குடிக்கின்றனர். குடிமகன்கள் மது அருந்தி வணிக வளாகத்தை மீண்டும் செயல்படாத பாராக மாற்றியுள்ளனர். இதனால் வளாகம் முழுவதும் காலி மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கப் போன்ற குப்பைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. துர்நாற்றம் தாங்க முடியாமல் வியாபாரிகளும், பொது மக்களும் முகம் சுழிக்கின்றனர். மது அருந்துபவர்கள் தள்ளாடிக் கொண்டு, தகாத வார்த்தைகளை பேசி சண்டை போடுவது, மது பாட்டில்களை உடைத்து, குடிமகன்கள் மது அருந்திவிட்டு புலம்புவதால் கோயிலுக்கு வரும் பெண்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இதனால் சம்மந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி