சிவகாசி: யூடியூப் சேனல் ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனை ஜமீன்

67பார்த்தது
சிவகாசி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஜீயர்கள் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட வழக்கில் யூடியூப் சேனல் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் ஆஜராகி, பின்னர் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு.விருதுநகர் மாவட்டம், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் உள்ளிட்டோரை அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வீடியோ வெளியிட்டார். 

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் நிர்வாகி சக்திவேல் ராஜன் அளித்த புகாரின் பேரில் நேற்று புழல் சிறையில் கைதான ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் இன்று சிவகாசி நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தன் மீது கைது நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டுமென நீதிபதி முன்னிலையில் ரங்கராஜன் நரசிம்மன் வாதாடிய நிலையில், இருதரப்பு வாதத்தை தொடர்ந்து நீதிபதி அமலநாத கமலக்கண்ணன் தனது சொந்த ஜாமினில் ரங்கராஜன் நரசிம்மனை ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார். மேலும் வெளியூருக்கு செல்ல கூடாது, காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, நீதிமன்றத்தில் இருந்து அழைத்துவரப்பட்டபோது ஜாமீன் கிடைத்துள்ளது குறித்து, சட்டம் தன் கடமையை செய்துள்ளதாக ரங்கராஜன் நரசிம்மன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி