சிவகாசி மாநகர பகுதியில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்
ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தல்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென பொதுமக்களை ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி வார்டு மற்றும் மண்டலம் வாரியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். குறிப்பாக தூய்மைப், சுகாதார, குடிநீர் வழங்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயலாற்றி வருகிறார். தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் குடிநீர் விநியோகம் குறித்து மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ஆணையாளர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றார். சிவகாசி வடக்கு ரதவீதியில் ஆய்வு மேற்கொண்ட போது அந்த பகுதி பெண்களிடம் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றார். ஆய்வு குறித்து ஆணையாளர் கூறும்போது, சிவகாசி மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் 38 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளது. இதில் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது மாநகராட்சியில் அனைத்து மக்களுக்கும் தங்கு தடையின்றி சீரானமுறையில் குடிநீர் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. கோடைக் காலம் என்பதால் குடிநீரை பொதுமக்கள் சிக்கமான பயன்படுத்த வேண்டும். குறிப்பாக மின்மோட்டாரை பயன்படுத்தி குடிநீர் உறிஞ்சி எடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.