சிவகாசி அருகே துயர சம்பவம். சிக்கன் சாப்பிட்ட பணம் கிடைக்காததால்
கல்லூரி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சாமிபுரம் காலனியை சேர்ந்தவர் முத்தமிழ் மகன் லோகநாதன் ( 19). இவர் விருதுநகர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. ஏ. படித்து வந்தார். லோகநாதன் வீட்டில் உள்ளவர்களிடம் சிக்கன் சாப்பிட அடிக்கடி பணம் கேட்டுள்ளார். இதற்கு அவரது தாய் பணம் கொடுக்காமல் கண்டித்ததாக கூறப்படுகிறது, மேலும் நண்பர்களுடன் கொடைக்கானல் செல்ல ரூ. 2 ஆயிரம் கேட்டுள்ளார். அதற்கு அவரது தந்தை முத்தமிழ் ரூ. 1000 மட்டும் கொடுத்து உள்ளார். இதனால் மனமுடைந்த லோகநாதன் வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இறந்த கல்லூரி மாணவனின் உடலை கைப்பற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.