சிவகாசி: பாதி வழியில் நிறுத்தப்பட்ட தேரோட்டம்

55பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள பழமைவாய்ந்த சிவன் கோவில் வைகாசி பிரமோற்சவ விழா கடந்த மே 27ம் தேதி முதல் துவங்கி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது. 

தேரில் விஷ்வநாத சுவாமியும், விசாலட்சியும் எழுந்தருளி ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளை வந்தடையும் தருவாயில் பக்தர்கள் தேரை இழுக்காமல் திடீரென பாதியில் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக தேர் கோவிலின் வடக்கு வாசல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

தேர் திறந்த நிலையில் நிறுத்தி வைக்கப்படுவதால் மழை வெயிலில் நனைந்து தேர் பழுதடைந்து வருவதாக பக்தர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். இதன் காரணமாக இன்றைய தேரோட்டம் நிறைவுபெற்றதும் இன்று முதல் மீண்டும் தேரை வடக்கு வாசலில் நிலைநிறுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

இந்த முடிவிற்கு ஒரு தரப்பு பக்தர்கள் ஆதரவும் மற்றொரு தரப்பு பக்தர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் தேரோட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நீண்ட நேர பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து தற்காலிகமாக தேர் கோவில் நுழைவு வாயில் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி