சிவகாசி: மாணவ, மாணவியருக்கு பாட நூல் சீருடை வழங்கும் விழா...

66பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடநூல் மற்றும் பள்ளி சீருடை வழங்கப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து 2025-26ம் கல்வியாண்டிற்கான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. இந்நிலையில் சிவகாசி மாநகராட்சி அம்மன் கோவில்பட்டி தொடக்கப் பள்ளி உள்ளிட்ட மாநகரில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கு தமிழக அரசின் நிலையில்லா பாடநூல் சீருடை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மேயர் சங்கீதா இன்பம், பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளில் பள்ளிக்கு வருகை தந்த மாணவ- மாணவிகளை ரோஜாபூப்பூவுடன், சாக்லேட் கொடுத்து வரவேற்று தமிழக அரசின் இலவச பாட புத்தகங்களையும், நோட்டுகளையும் சீருடைகளையும் மாணவ- மாணவியருக்கு வழங்கினார். மாணவ மாணவியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உபகரணங்களை உற்சாகத்துடன் வாங்கிச் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி