சிவகாசி: வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

56பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரிசிக்கொள்வான் தெருவை சேர்ந்தவர் சசீந்திரன் (64). இவர் சிவகாசி காய்கறி மார்க்கெட்டில் கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீஸ் விசாரணையில் சசீந்திரனுக்கு சொந்தமான இடத்தை யாரோ சிலர் ஆக்கிரமித்து வைத்திருந்ததாகவும், இதனால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி