சிவகாசி அருகே பெண் மீது கொடூர தாக்குதல் நிதி நிறுவன ஊழியர்கள் கைது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள நாரணாபுரம் ராஜூவ்நகரை சேர்ந்தவர் குட்டி மகன் பாக்கியசெல்வன். இவர் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் டூவீலர் வாங்க ரூ. 30 ஆயிரம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்கு கடந்த 2 மாதங்களாக உரிய வட்டி தொகை ரூ. 6ஆயிரத்து 700 கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் சரவணக்குமார், ரஞ்சித்குமார், சபரீஸ்வரன் ஆகியோர் பணத்தை வசூல் செய்ய பாக்கியசெல்வன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த பாக்கியசெல்வனின் தாய் சுதாவுக்கும், நிதி நிறுவன ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டதில் சுதாவை நிதி நிறுவன ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணக்குமார், ரஞ்சித்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.