விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் பணியில் மாரடைப்பால் சத்தீஸ்கரில் மரணம். சத்தீஸ்கர் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றிய சிவகாசி ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த பரமசிவம் பணியின் போது நேற்று மாரடைப்பால் காலமானார். அவரது மகன் தர்ஷன் தனது தந்தை மறைந்த துயர நிலையிலும் இன்று +1 பொதுத்தேர்வு எழுதியுள்ளார். தந்தை மறைந்த நிலையில் அவரது கனவை நினைவாக்கும் வகையில் கல்வியில் சிறந்து தாமும் ராணுவ வீரராக பணியாற்றுவேன் என மாணவன் தர்ஷன் உறுதியேற்றுள்ளார். மேலும் மறைந்த எல்லை பாதுப்படை வீரர் பரமசிவத்தின் உடல் சொந்த ஊரான சிவகாசிக்கு கொண்டு வரப்பட்டு அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டன.