சிவகாசியில்
கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியின் உடல் தானம்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்தவர் லாசர் ( 83). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரான இவர் சிவகாசி நகராட்சி கவுன்சிலராகவும் பணியாற்றி உள் ளார். வயது மூப்பு காரணமான உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று மார்ச். 15 இரவு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இவரது இறப்பு செய்தி அறிந்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொழில் அதிபர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் லாசர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். லாசர் உடலை தானம் வழங்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இது குறித்து விருதுநகர் மருத்துவ கல்லூரிக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக் காக லாசர் உடல் சிவகாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அங்கு வந்த சிவகாசி சப் கலெக்டர் ப்ரியாரவிச்சந்திரன், தாசில்தார் லட்சம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் லாசர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் விருதுநகர் அரசு மருத்துவகல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு தானமாக வழங்கப்பட்டன.