சிவகாசி: அரசு மருத்துவமனையில் குழந்தை தொட்டில் துவக்கம்

66பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சிவகாசி மாநகராட்சி, அன்பால் இணைவோம் அறக்கட்டளை சார்பில் சிவகாசி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் குழந்தை தொட்டில் திட்டம் துவக்கப்பட்டது.

மாவட்டத்தில் விருப்பமில்லாமல் பெறும் பச்சிளம் குழந்தைகளை குப்பைத் தொட்டியில் வீசுவதை தடுப்பதற்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் குழந்தை தொட்டில் வைக்கப்பட்டது. விருப்பமில்லாமல் பெறுகின்ற குழந்தைகளை தொட்டியில் வைப்பதன் மூலம் அரசு பாதுகாக்கும் பணியை மேற்கொள்ளும். 

மாவட்டத்தில் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பின்னர் சிவகாசி அரசு மருத்துவமனையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சிவகாசி அரசு மருத்துவமனையிலுள்ள அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் வைக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் அய்யனார், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் நலக் குழு மற்றும் மாநகராட்சி குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகள் அன்பால் இணைவோம் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி