சிவகாசி: சாதனை மாணவிகளுக்கு பாராட்டு விழா...

57பார்த்தது
சிவகாசி: சாதனை மாணவிகளுக்கு பாராட்டு விழா...
சிவகாசி அருகே சாதனை மாணவிகளுக்கு மாநகர திமுக சார்பாக நிதி உதவி.
விருதுநகர் மாவட்டம்,
அரசு பொது தேர்வில் சாதனை படைத்த மாணவிகளுக்கு சிவகாசி மாநகர திமுக சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டன.
சிவகாசி மாநகராட்சியில் திருத்தங்கல் மண்டலத்தில் வசித்து வரும் கார்த்திகா, சுபாஷினிதேவி, லிங்கேஸ்வரி ஆகியோர் அரசு தேர்வில் பள்ளி அளவில் சாதனை படைத்தனர். 3வது மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளை பாராட்டிய தி. மு. க. மாநகர செயலாளர் எஸ். ஏ. உதயசூரியன் தலா ரூ. 5ஆயிரம் கல்வி நிதி உதவி வழங்கினார். இந்த நிழ்ச்சியில் மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் குருசாமி, தி. மு. க. பகுதி கழக செயலாளர்கள் மாரீஸ்வரன், கவுன்சிலர் சேதுராமன், மாவட்ட பிரதிநிதி ராஜேஷ், 10 வது வட்டக் கழக செயலாளர் கருப்பசாமி, சிவகாசி மாநகர நெசவாளர் அணி துணை அமைப்பாளர் விக்ரமாதித்தன், 12வது வார்டு அர்ச்சுனன், கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி