சிவகாசி: அப்பன், அம்பாளும் ரிஷப வாகனத்தில் வீதி உலா..

68பார்த்தது
சிவகாசியில், ' ரிஷப' வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீவிசாலாட்சி அம்மன்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி கோவிலில், வைகாசி பிரம்மோற்சவ திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 4ம் நாள் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமிக்கும், ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். இரவு, ஸ்ரீவிசாலாட்சி அம்மன் ' ரிஷப' வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதனையடுத்து, ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமியும், ஸ்ரீவிசாலாட்சி அம்மனும் ' ரிஷப' வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். சுவாமிகள் திருவீதி வலம் வந்த போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரிகளும், நிகழ்ச்சி உபயதாரர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி