சிவகாசியில் விநாயகர் ஆலய வாசலில் இப்படி ஒரு வண்ணக்கோலமா? மிகுந்த வரவேற்பு. மக்கள் வியப்புடன் கண்டுகளிப்பு.
விருதுநகர் மாவட்டம்,
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சிவகாசியில் உள்ள புதுரோட்டில் அமைந்துள்ள தூய கிருஸ்துவ ஆலயம் மற்றும் CSI கிருஸ்துவ ஆலயங்களில் கிருஸ்துமஸ் கொண்டாட்டமும் சிறப்பு வழிபாடும் நடைபெற்றன.
இயேசுகிருஸ்து பிறந்த தினமான இன்று நாடு முழுவதும் மக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மத நல்லிண ஒற்றுமைக்கு சான்றாக சிவகாசி பழனியாண்டவர் காலனியில் அமைந்துள்ள பழனி விநாயகர் கோவில் வாசலில் கிருஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாகவும், மதநல்லிணத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பக்தர் ஒருவர் வண்ண கோலப்பொடிகளை கொண்டு சுமார் 5 அடி வட்ட வடிவில் நட்சத்திரங்கள், கிருஸ்துமஸ் மரம் குடில் அன்பளிப்பு பேட்டி பனி மூடிய தரை போன்று நேர்த்தியாக வரைந்துள்ளார்.
இவ்வாறு வரையப்பட்ட கோலம் சிவகாசி நகர் மக்கள் வியப்புடன் பார்வையிட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.