சிவகாசி: உயிர் பலி வாங்க காத்திருக்கும் ஓடை பாலம்...

50பார்த்தது
சிவகாசி அருகே உயிர் பலி வாங்க காத்திருக்கும் ஓடை பாலம். மாற்று பாலம் தேவை பொதுமக்கள் கோரிக்கை.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த சுக்கிரவார்பட்டி செல்லும் சாலையில் நாள் தோறும் நூற்றுக்கணக்கான கிராமப்புற மக்கள், பள்ளி மாணவ, மாணவியர் சென்று வருகின்றனர். இந்த சாலையில் உள்ள சுக்கிரவார்பட்டி ஓடையின் குறுக்கே கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டப்பட்டது. தற்போது பாலத்தின் அடிமட்ட பகுதியில் முற்றிலும் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது. கிராமப்புற மக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த பாலம் எப்பொழுது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ளதால் சாலையைக் கடக்கும் பொது மக்களின் பாதுகாப்பு உறுதியற்ற நிலையில் உள்ளதாக அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலம் குறுகிய காலத்தில் சேதம் அடைந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய உள்ளது. மேலும் பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் தரமான முறையில் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி