சிவகாசி: கஞ்சா விற்பனை செய்த 2 பெண்கள் உள்பட 9 பேர் கைது.

63பார்த்தது
சிவகாசி பகுதியில் கஞ்சா பறிமுதல். 9 பேர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் 20 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய் தனர் இதுதொடர்பாக 9 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிவகாசி உட்கோட்டத்தில் கஞ்சா கடத்தல் சம்பவங்கள் அதிகளவில் உள்ளதாகவும், சிவகாசி பகுதியில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் மாவட்ட போலீஸ் நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் சிவகாசி உடகோட்ட போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர், கிழக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் பர்மா காலனி பகுதியில் திடீர் ஆய்வு
செய்தனர் அப்போது அதே பகுதியை சேர்ந்த பாண்டியம்மாள், அரிபாண்டி, விருமாண்டி ஆகாஷ், ஆகியோர் சுமார்1கிலோ100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது, 3 பேரையும் போலீசார் கைது கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதே போல் சிவகாசி டவுன் சார்பு ஆய்வாளர் ஜோதிமுத்து, காமராஜர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சாட்சியார்புரத்தை சேர்ந்த செல்வகணபதி, வினோத்குமார், சிவபிரகாஷ், பூபேஷ்குமார் கற்குவேல் ஆகியோர் சுமார் 500 கிராம் கஞ்சாவை விற்பனை செய்ய வைத்திருந்ததாக கூறப்படுகிறது இதை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :